கொரோனா தடுப்பூசி சான்று நிறுத்தம் * வெளிநாடு செல்ல முடியாமல் இளைஞர்கள் தவிப்பு

சிவகங்கை:கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று நிறுத்தப்பட்டதால் பாஸ்போர்ட், விசா எடுத்தும் வெளிநாடு செல்ல முடியாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.

இந்தியாவில் ‛கோ வேக்சின்', ‛கோவிஷீல்ட்', தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. சவுதி அரேபியா, குவைத், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்வோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார அலுவலகங்களில் கொரோனா தடுப்பூசி சான்று பெற்று வெளிநாடு சென்று வந்தனர். தடுப்பூசி சான்றினை, தமிழக அரசு சில மாதங்களாக நிறுத்தி விட்டது. இதனால் வெளிநாடு செல்ல முடியாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர். மீண்டும் தடுப்பூசி சான்று வழங்க வேண்டும், ஏற்கனவே இருந்தபடி இணையதளம் மூலம் பெறுவற்கும் வழி செய்ய வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement