மதுபாட்டில் விற்ற முதியவர் கைது

விருத்தாசலம் : கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்ற முதிய வரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது, கர்னத்தம் சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த முதியவரை பிடித்து விசாரித்தனர்.

அவர், கர்னத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 60; என்பதும், கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்றதும் தெரிந்தது. அவரிடமிருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, ராஜேந்திரனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement