வெளிநாடு அனுப்ப போலி விசா வழங்கி ரூ.6.50 லட்சம் மோசடி
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வாலிபரிடம் வெளிநாடு அனுப்ப போலி விசா வழங்கி ரூ.6.50 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
காரைக்குடி வெள்ளைச்சாமி மகன் சரவணக்குமார் 39. இவர் வெளிநாட்டில் வேலை செய்ய அங்குள்ள முகவர்கள் மூலம் வேலை தேடினார்.
2024 ஜூலை 10ல் வாட்ஸ் அப் மூலம் போன் வந்துள்ளது. போனில் அடையாளம் தெரியாத நபர் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் முகவர் என கூறியுள்ளார். அந்த நபர் வெளிநாடு செல்ல விசாவிற்கு பணம் கேட்டுள்ளார்.
அவர் கூறிய வங்கி கணக்கிற்கு சரவணக்குமார் 2 தவணைகளாக ரூ.6.50 லட்சத்தை அனுப்பினார். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர் சரவணக்குமாருக்கு போலி விசாவை வழங்கினார். இதுகுறித்து சரவணக்குமார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
எஸ்.ஐ., முருகானந்தம் வழக்கு பதிந்து ஏமாற்றிய நபரின் வங்கி கணக்கு மூலம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும்
-
கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கல்
-
தொழிலாளி மர்ம சாவு
-
மேல்மலையனுார் கோவிலில் ரூ.73 லட்சம் காணிக்கை வசூல்
-
தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது
-
அரசு பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணமாக ரூ.20 வசூலிக்க உத்தரவு பிரின்டர், பேப்பர் வசதி இருந்தும் 'கமிஷனுக்கான' நடவடிக்கையா
-
பயங்கரவாதிகள் தாக்குதல்: நைஜீரியாவில் 51 பேர் பலி