காட்சி பொருளான மின்மாற்றி

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த பூண்டி ஒன்றியம் வடதில்லை ஊராட்சியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை.

இங்கு புகழ்பெற்ற மரகதவல்லி சமேத பாபஹரேஸ்வரர் கோவில் உள்ளது. இப்பகுதியில் குறைந்த மின் அழுத்தம் இருந்ததால், மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதனால், இரவு நேரங்களில் இப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

ஆறு மாதங்களுக்கு முன், வடதில்லை கிராமத்தில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. கோடைக்காலம் துவங்கிய நிலையில், இரவு நேரங்களில் மக்கள் புழுக்கத்தில் அவதிப்படுகின்றனர்.

எனவே, ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரிகள், மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement