அரசு பள்ளிகளில் சேர்க்கை ஆண்டுதோறும்... குறைகிறது; 'சிங்கிள்' டிஜிட்டில் மாறும் மாணவர் எண்ணிக்கை

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டு தோறும் குறைந்து வருகிறது.
கடலுார் வருவாய் மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 7 வட்டாரங்கள் உள்ளன. கடலுார் கல்வி மாவட்டத்தில் மட்டும் 576 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வந்தனர்.
ஆண்டுதோறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதை சமன் செய்ய ஆசிரியர்கள் பள்ளியில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி, மாணவர் அறிமுக விழா, விடுமுறை எடுக்காத மாணவருக்குப் பரிசு போன்ற முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர்.
இந்தக் கல்வியாண்டில் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்குதல், புத்தகம், நோட்டு, சீருடை உள்ளிட்ட பொருட்களையும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது போதாது என்று தமிழக அரசும் தொடக்கப்பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழி கல்வி படித்த மாணவ மாணவியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்கிற அறிவிப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கல்வி மாவட்ட அளவில் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சேர்க்கையில் குறைந்து வருகின்றன. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, பெற்றோர்கள் அதிகளவு குழந்தைகளை பெற்றுக்கொள்வது குறைந்துவிட்டதும் ஒரு காரணம்.
ஒரு சிலரைத் தவிர ஒரு குடும்பத்திற்கு ஆணோ அல்லது பெண்ணோ ஒரு குழந்தை போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டனர். இதனால் பிறவியிலேயே குழந்தை பிறப்பது குறைந்துவிட்டதால் அரசு பள்ளிகளில் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, பெற்றோர்கள் ஆங்கிலம் பேசும் பள்ளிகளில் தமது குழந்தைகளை சேர்ப்பது, சி.பி.எஸ்.இ.,- என்.சி.இ.ஆர்.டி, ஆகிய பள்ளிகளில் சேர்த்தால் நீட் தேர்வு, ஜே.இ.இ., கேட் உள்ளிட்ட படிப்புகளுக்காக சேர்க்கும் நிலை உள்ளது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைவதாக பெற்றோர்கள் கருதுகின்றனர்.
அதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கனிசமாக குறைந்து வருவது தவிர்க்க இயலாது. இதனால் ஓரிலக்க எண்களில் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடலுார் கல்வி வட்டாரத்தில் 10 சிங்கிள் டிஜிட் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், சமையலர் போன்ற ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதனால் அரசுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படுகிறது.
மேலும்
-
தோல்வியில் இருந்து மீளப்போவது யார்? ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு
-
உயர்கல்வித்துறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்; முதல்வர் ஸ்டாலின்
-
மக்களுக்கு கஷ்டமான சூழ்நிலை; மாற்றவே கூட்டணி: நயினார் நாகேந்திரன்
-
நிதி மோசடி: 200 இந்தியர்களை நீக்கியது அமெரிக்க நிறுவனம்
-
பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை
-
ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை