நிலத்தை பிடுங்க முடியாது!

நாட்டு மக்களின் நிலத்தை பலவந்தமாகவோ, ஒரு தலைபட்சமாகவோ எடுத்துக்கொள்ளும் முறை இருக்கக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டதே வக்ப் திருத்தச் சட்டம். இந்த சட்டம் கடந்த கால தவறுகளை சரி செய்யும் நோக்கம் உடையது. இதில் முஸ்லிம் சமூகத்தை குறிவைக்கவில்லை.
கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர், பா.ஜ.,
சரியான நேரம்!
ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தல் முடிந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. மாநில அந்தஸ்தை மீண்டும் தருவதற்கு இப்போது சரியான நேரம் வந்துவிட்டது என நம்புகிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும்.
ஒமர் அப்துல்லா
ஜம்மு - காஷ்மீர் முதல்வர்,
தேசிய மாநாட்டு கட்சி
நிதிஷ் தான் முதல்வர்!
பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முகமாகவும், தேர்தல் வெற்றிக்கு பின் முதல்வராகவும் நிதிஷே தொடர்வார். இது தொடர்பாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த சில பா.ஜ., தலைவர்கள் தவறான தகவல்களை கூறி வருகின்றனர். அதை நம்ப வேண்டாம்.
ராஜிவ் ரஞ்சன் பிரசாத்
செய்தித் தொடர்பாளர்,
ஐக்கிய ஜனதா தளம்