செயல்பட துவங்கிய கம்பம் நகராட்சி எரியூட்டும் மயானம்

கம்பம் : கம்பம் நகராட்சி சார்பில் எரியூட்டு மயானம் ஆங்கூர் பாளையம் ரோட்டில் நகராட்சி குப்பைக்கிடங்கு இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் மயான புகை கூடு பழுது ஏற்பட்டதால், மயானம் பழுது நீக்க செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த 3 மாதங்களாக இறந்தவர்களை கூடலூர் மற்றும் உத்தமபாளையம் எரியூட்டு மயானங்களுக்கு கொண்டு சென்றனர். தற்போது ரூ.14 லட்சம் செலவில் புகை வெளியேற்றும் குழாய் பழுது நீக்கம் செய்யப்பட்டு நேற்று முதல் செயல்படத் துவங்கியதாக நகராட்சி தலைவர் வனிதா தெரிவித்துள்ளார்.

Advertisement