காசநோய் மருத்துவ முகாம்

காரியாபட்டி : மல்லாங்கிணர் பேரூராட்சியில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ், மாவட்ட காசநோய் பிரிவு சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே, ஸ்கேன், பரிசோதனை முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் துளசி தலைமை வகித்தார். செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் வேல் விக்னேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். சளி, ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், இதர பரிசோதனைகள் செய்யப்பட்டன.

ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் தங்ககுமார், அக்பர் செய்திருந்தனர். சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement