காமாட்சி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பொட்டல்பட்டி - திருநகரம் காமாட்சி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்தது.

பொங்கல் விழா ஏப்.11ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று கோயிலில் பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். காமாட்சி அம்மனுக்கு அபிஷேக, அலங்காரங்கள் நடந்தது.

பின்னர் பக்தர்கள் ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து காமாட்சி அம்மன் கோயிலில் செலுத்தினர். இதனை தொடர்ந்து கரகம், தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement