வாரிசுதாரர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி : சுகாதாரத் துறை வாரிசுதாரர்கள் நல சங்கம் சார்பில், சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

சுகாதாரத் துறையில் வாரிசுதாரர்கள் பணி வழங்க வேண்டி 137 நபர்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். ஆனால், நிர்வாகம் வருடந்தோறும், 5 சதவீதம் கொடுக்கும் வேலையை 10 ஆண்டுகள் கழித்து 5 சதவீதம் என்ற அடிப்படையில் வெறும் 31 நபர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என்று ஒரு கோப்பினை தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளனர்.

இதனைக் கண்டித்து கடந்த பிப்., 10ம் தேதி முதல் வாரிசுதாரர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி 23 நாட்களாக நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 12ம் சாலை மறியலில் ஈடுபட முயன்ற நிலையில், மருத்துவ அதிகாரிகள், பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

ஆனால் இதுவரை பனி மூப்பு அடிப்படையிலான பட்டியல் வெளியிடமால், இருப்பதை கண்டித்தும், இதில் முதல்வர் நேரடியாக தலையிட்டு வாரிசு பணியினை பெற்றுத் தரும்படி கோரிக்கை வைத்து நேற்று சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement