வாலிபர் தற்கொலை

புதுச்சத்திரம் : மது போதையில் வாலிபர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சத்திரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் துரைசாமி மகன் அருண் பாண்டியன், 30; கூலி தொழிலாளி.

இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வீட்டில், அவர் மதுபோதையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார், உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement