கோடை விடுமுறைக்கு கூடுதல் பஸ் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

திண்டுக்கல் : கோடை விடுமுறை நெருங்குவதால் சொந்த ஊர்கள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்வது வழக்கம். இதனால் மாவட்டங்களுக்கு இடையே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்து விட்டது. மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகள் விரைவில் முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும், ஆன்மிக பயணங்கள் சென்று வருகின்றனர்.

இதனால் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கையை விட கோடை விடுமுறையில் கூடுதலாக பயணிக்கின்றனர். கூட்டம் அதிகமாக இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாமல் வழக்கமான எண்ணிக்கையில் பஸ்கள் அந்தந்த வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இப்பிரச்னையை சரிசெய்ய கோடை விடுமுறைக்கு வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லவும், பிரசித்தி பெற்ற சுற்றுலா, ஆன்மிக தலங்களுக்கு எளிதாக சென்று வர மாவட்டங்களுக்கு இடையே கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement