இலவசமாக பசுமை பந்தல் அமைப்பதை தடுத்து திருப்பி அனுப்பிய மாநகராட்சி

கடலோர மாவட்டமான கடலுாரில் வெயில் காலத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் அவதிப்படுவது வாடிக்கை. சாலையில் சிக்னல் இருக்கும் 4 இடங்களில் வாகன ஓட்டிகள் வெயிலில் நின்று செல்வது கடினமானது என்பதற்காக சென்னை, புதுச்சேரி நகரங்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அதேப் போல கடலுாரிலும் பசுமை பந்தல் அமைக்க தொண்டு நிறுவனங்கள் யாராவது முன்வருவார்களா என 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

அதன்படி, கடலுாரில் உள்ள பெரிய சிக்னலான அண்ணா மேம்பால இறக்கத்தில் கடலுாரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடை தாமாக முன்வந்து பசுமை பந்தல் அமைத்து தருவதற்காக முன்வந்தது.

அதற்காக மாநகராட்சியிடம் அனுமதி பெறுவதற்காக வந்த துணிக்கடை ஊழியரிடம், அதெல்லாம் மாநகராட்சி பார்த்துக் கொள்ளும், நீங்கள் ஏதும் செலவு செய்து போட வேண்டாம் என விரட்டியடித்தனர்.

ஆனால் 10 நாட்களுக்கு மேல் ஆகியும் பந்தல் அமைக்கும் பணி நடைபெறவில்லை. பகலில் வெப்பம் 100 டிகிரி தாண்டுகிறது.

வாகன ஓட்டிகள் சிக்னலுக்கு நின்று செல்வதற்குள் பெரும்பாடாக உள்ளது.

Advertisement