விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் வேளாண் துறை செயலர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் வேளாண்துறை அரசு செயலர் தட்சணாமூர்த்தி ஆய்வு செய்தார்.
அப்போது, விவசாயிகளுக்கான வசதி, இருப்பு வைத்துள்ள விளை பொருள்கள் நிலை குறித்தும், தேசிய மின்னணு வேளாண் சந்தையின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், தினசரி விவசாயிகளின் வருகை, விளை பொருள்களை ஏலம் விடும் முறை, ஏல நடவடிக்கை, பணம் பட்டுவாடா விபரம் குறித்தும், அதிகாரிகள், விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் அளிக்க வேண்டும். பணம் பட்டு வாடா தாமதமின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, விழுப்புரம் உழவர் சந்தையை பார்வையிட்டார். அங்குள்ள உழவர் சந்தையை விரிவுபடுத்தி, சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கும்படியும், விவசாயிகள் விளைபொருள்கள் கொண்டுவர இலவச பஸ் வசதி, அடையாள அட்டை, காய்கறி சந்தை விலை நிர்ணயம் செய்திடவும் உத்தரவிட்டார்.
வேளாண் இணை இயக்குநர் ஈஸ்வர், துணை இயக்குநர்கள் சீனுவாசன், சரவணன், விற்பனை கூட செயலர் சந்துரு உடனிருந்தனர்.
மேலும்
-
பொது 4 விரைவு ரயில்களில் கூடுதல் 'ஏசி' பெட்டிகள்
-
கழிவில் இருந்து மணல், ஜல்லியை பிரித்து கட்டுமான பணிக்கு விற்கிறது மாநகராட்சி
-
தொழில் துவங்குவது என்றால் சும்மாவா? புரிய வைத்த புனே மாவு மில் உரிமையாளர்
-
இந்திய கட்டுமான வல்லுனர் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
-
போதையில் ரவுடியிசம் 5 பேர் கைது
-
லக்னோ அணியில் மயங்க்