லக்னோ அணியில் மயங்க்

புதுடில்லி: காயத்தில் இருந்து மீண்ட 'வேகப்புயல்' மயங்க் யாதவ், மீண்டும் லக்னோ அணியில் இணைந்தார்.
டில்லியை சேர்ந்தவர் மயங்க் யாதவ், 22. பிரிமியர் ஏலத்தில் (2022) இவரை லக்னோ அணி ரூ. 20 லட்சத்திற்கு வாங்கியது. கடந்த சீசனில் 156.7 கி.மீ., வேகத்தில் பந்து வீசினார். தவிர தொடர்ந்து 150 கி.மீ., வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்டவர். 18 ஆண்டு ஐ.பி.எல்., வரலாற்றில் அறிமுகம் ஆன முதல் இரு போட்டியில் ஆட்டநாயகன் ஆன முதல் வீரர் என வரலாறு படைத்தார். கடந்த சீசனில் 4 போட்டியில் மட்டும் பங்கேற்ற நிலையில், வயிற்றுப் பிடிப்பு காரணமாக விலகினார்.
வங்கதேசத்திற்கு எதிரான 'டி-20' தொடரில் கடந்த 2024, அக்., மாதம் அறிமுகம் ஆனார். பின் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காத மயங்க், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில், மீண்டு வர தேவையான பயிற்சியில் ஈடுபட்டார். இருப்பினும், லக்னோ அணி, இவரை தக்கவைத்துக் கொண்டது.
நடப்பு பிரிமியர் சீசனில் களமிறங்க இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக கால் விரலில் காயம் ஏற்பட்டது. இதில் இருந்து மீண்ட மயங்க், மீண்டும் லக்னோ அணியில் இணைந்தார். வரும் 19ல் ஜெய்ப்பூரில் நடக்கவுள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க காத்திருக்கிறார். இவரது வருகை, லக்னோ அணியின் பவுலிங்கை பலப்படுத்தியுள்ளது.
மேலும்
-
போட்ஸ்வானாவில் இருந்து இந்தியா வரும் சிவிங்கிப்புலிகள்: மே மாதம் கொண்டுவர ஏற்பாடு
-
கே.எப்.சி., சிக்கன் கடைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்; ஒருவர் கொலை
-
குஷ்புவின் சமூக வலைதள பக்கத்தை கைப்பற்றிய ஹேக்கர்கள்!
-
ஒரே ஒரு (ஓ)நாயின் விலை ரூ.50 கோடி தானாம்!
-
அந்த நிலையில் நாம் இருந்தால்...?
-
அம்முவும்... நானும்...!