தொழில் துவங்குவது என்றால் சும்மாவா? புரிய வைத்த புனே மாவு மில் உரிமையாளர்

புனே:சிறிய தொழில் துவங்குவதற்கே எத்தனை அனுமதிகள் வாங்க வேண்டியுள்ளது என்பதை, புனே மாவு மில் உரிமையாளரின் செயல் எளிதில் புரிய வைத்துள்ளது.

தன்னுடைய ஒரு மாவு மில்லை நடத்துவதற்காக வாங்கியிருக்கும் 16 அனுமதி சான்றிதழ்களை, அவர் பிரேம் போட்டு, சுவரில் மாட்டி வைத்துஉள்ளார்.

புனேவை சேர்ந்த நிதி ஆய்வாளர் நிதின் தர்மவாத் என்பவர், இதை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இது 'வைரல்' ஆகியுள்ளது.

புகைப்படத்தை வெளியிட்டு, 'நாட்டில் எளிதாக தொழில் துவங்குவதற்கான தற்போதைய சூழலை விளக்க, இதைவிட சிறந்த உதாரணம் இல்லை' என அவர் பதிவிட்டுள்ளார்.

சிறிய மாவு மில் துவக்குவதற்கு இத்தனை உரிமங்கள், அனுமதிகள், ஒப்புதல்கள், சான்றிதழ்கள் சட்டரீதியாக தேவைப்படுவதாகவும், அதை மில் உரிமையாளர் பெற்றதுடன், சுவரில்வரிசையாக தொங்க விட்டுள்ளார் என்றும் நிதின் தெரிவித்துஉள்ளார்.

Advertisement