தென்னம்பாக்கம் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கடலுார் : தென்னம்பாக்கம் அழகர் கோவிலில் சித்திரைப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கடலுார் அடுத்த தென்னம்பாக்கம் பூரணி பொற்கலை சமேத அழகர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் சித்திரை பெருவிழா, அழகர் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு கடந்த 13ம் தேதி ஆற்றில் இருந்து கரகங்கள் புறப்பாடு, மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது.

நேற்று முன்தினம் காலை ஆற்றில் இருந்து காவடிகள் புறப்பாடு, பொன்னியம்மன் கரகம் புறப்பாடு, சித்தர் பீடத்தில் சிறப்பு ஆராதனை நடந்தது.

மாலை சுவாமி திருக்கல்யாணத்தையொட்டி பூரணி பொற்கலை அம்மன் சமேத அழகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை இசைக்க பூரணி பொற்கலை அம்மன் சமேத அழகருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் தக்கார் சந்திரவேணி, செயல் அலுவலர் வேல்விழி மற்றும் கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement