பச்சைவாழியம்மன் கோவிலில் 2ம் தேதி தீமிதி விழா

கடலுார் : பிள்ளையார்மேடு பச்சைவாழியம்மன் கோவிலில் 18ம் ஆண்டு பிரம்மோற்சவ தீமிதி திருவிழா வரும் மே 2ம் தேதி நடக்கிறது.

கடலுார் அடுத்த காரைக்காடு மதுரா பிள்ளையார்மேடு பச்சைவாழியம்மன் கோவிலில், 18ம் ஆண்டு பிரம்மோற்சவ தீமிதி திருவிழா கடந்த 12ம் தேதி கணபதி ேஹாமம், கொடியேற்றத்துடன் துவங்கியது.

வரும் 25ம் தேதி நந்தீஸ்வரர் பூஜை, 26ம் தேதி சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை வீதியுலா, 27ம் தேதி பச்சைவாழியம்மன், மணல் நாதலிங்கம் வீதியுலா, 28ம் தேதி பச்சைவாழியம்மன் வீதியுலா, 29ம் தேதி அர்த்தநாரீஸ்வரர், 30ம் தேதி காமாட்சி அம்மன் வீதியுலா, மே 1ம் தேதி மீனாட்சி அம்மன் வீதியுலா நடக்கிறது.

வரும் 2ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு மகா அபிேஷகம், காலை 10:00 மணிக்கு சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், மாலை 5:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது.

ஏற்பாடுகளை, கோவில் பூசாரிகள் பச்சையப்பன், ராமலிங்கம், சஞ்சய்காந்தி, முருகேசன், பாஸ்கரன் செய்து வருகின்றனர்.

Advertisement