பொது விஷயத்தில் தலையிட்டால் வரி விதிக்கப்படும்; ஹார்வர்டு பல்கலைக்கு டிரம்ப் எச்சரிக்கை

5


வாஷிங்டன்: ''பொது விஷயங்களில் தலையிட்டால் வரி விதிக்கப்படும்'' என நிதியுதவி நிறுத்திய பிறகு, ஹார்வர்டு பல்கலைக்கு அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.


அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலை, அரசியல் மற்றும் பயங்கரவாத ஆதரவு கருத்துகளை ஊக்குவிப்பதாக கூறியுள்ள, அந்நாட்டு அதிபர் டிரம்ப், அதற்கு அளித்து வந்த, 18,500 கோடி ரூபாய் அரசு நிதியுதவியை நிறுத்தினார். தற்போது இன்னொரு மிரட்டல் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: பல்கலைக்கழகத்திற்கு என வரி விலக்கு உரிமை இருக்கிறது. இது பறிக்கப்படும். பல்கலைக்கு அரசு ஆதரவு வேண்டும் எனில், பல்கலை பொது விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். பொது விஷயங்களில் தலையிட்டால் வரி விதிக்கப்படும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்ப் குற்றச்சாட்டு



இதற்கிடையே, ரஷ்யாவுக்கு எதிரான போரில் கூடுதல் ஏவுகணைகளை உக்ரைன் வாங்க விரும்புகிறது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.



இதற்கு அதிபர் டிரம்ப் அளித்த பதில்: எப்போதும் ஏவுகணைகளை வாங்க வேண்டும் என்பதில் ஜெலன்ஸ்கி அதிக கவனம் செலுத்துகிறார். தங்கள் நாட்டை விட 20 மடங்கு பெரிய நாட்டுடன் போர்புரிந்தால் பிற நாடுகள் ஏவுகணைகள் வழங்கிக் கொண்டே இருக்கும் என அவர் நினைப்பது தவறு.


ரஷ்ய- உக்ரைன் போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகிய 3 பேரும் தான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement