தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் எதிர் எதிரே அணிவகுத்து நிற்கும் பஸ்களால் இடையூறு பயணிகள் அவதி

தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் எதிர் எதிர் திசையில் உள்ளே நுழைவதும், இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடியில் பயணிகள் அவதியடைகின்றனர்.
தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் ராஜவாய்க்கால் சீரமைப்பு பணி,அதன் அருகே கம்பம் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் தரைப்பாலம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தேனியில் இருந்து போடி, கம்பம் வழியாக செல்லும் பஸ்கள் மட்டும் வடக்கு நுழைவாயில் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளே சென்று கம்பம் ரோட்டிற்கு செல்கின்றன. மறு மார்க்கமாக வரும் பஸ்கள் மதுரை ரோட்டில் பகவதி அம்மன் கோயில் தெரு அருகே நிறுத்தி பயணிகள் ஏற்றி, இறக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி, பெரியகுளத்திற்கு இயக்கப்படும் டவுன்பஸ்கள், ஆட்டோக்கள் மேற்கு நுழைவாயில் வழியாக பஸ் ஸ்டாண்டிற்குள் வருகின்றன. எதிர் எதிராக பஸ்கள் வரும் சமயங்களில் ஆட்டோக்கள் இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்கள் அப்படியே நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் அவதியடைகின்றனர். இப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
'இது வேற லெவல்ங்க... இந்தியாவில் முதன்முறையாக ரயிலில் ஏ.டி.எம்.,: சோதனை 'சக்சஸ்'
-
ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'
-
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை