மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!

திருநெல்வேலி: வரதட்சணை என்ற பெயரில் திருநெல்வேலி அல்வா இருட்டுக்கடையை கேட்ட புதுமாப்பிள்ளை மருமகன் பல்ராம் சிங் குடும்பத்தினர் மீது அல்வா கடை உரிமையாளர் கவிதா சிங், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா குழுமத்தின் உரிமையாளர் கவிதா சிங், தனது மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக திருநெல்வேலி போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கவிதா சிங் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2, 2025 அன்று தாழையத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, கனிஷ்கா தனது கணவருடன் கோவையில் வசித்து வந்தார். பல்ராம் சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை கனிஷ்கா கண்டித்ததால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த கனிஷ்கா கடந்த மார்ச் 15ம் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மறுநாள் இரவு, பல்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் கவிதா சிங்கின் வீட்டிற்கு வந்து, கனிஷ்காவுடன் நல்ல முறையில் வாழ வேண்டுமென்றால் கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என்றும், நெல்லையில் இயங்கி வரும் இருட்டுக்கடை கடையை பல்ராம் சிங்கின் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்றும் மிரட்டினர்.
இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மகளின் எதிர்காலத்தைக் கருதி இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்த கவிதா சிங், பின்னர் பல்ராம் சிங் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டியதால், தனது உயிருக்கும், தனது பெற்றோருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, தனது கணவர் பல்ராம் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவிதா சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலியில் தலைமுறை தலைமுறையாக பிரபலமான இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த வரதட்சணை புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து (23)
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
16 ஏப்,2025 - 18:49 Report Abuse

0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
16 ஏப்,2025 - 18:14 Report Abuse

0
0
Reply
Karthikeyan Palanisamy - தமிழன்,இந்தியா
16 ஏப்,2025 - 17:51 Report Abuse

0
0
Reply
Rasheel - Connecticut,இந்தியா
16 ஏப்,2025 - 17:04 Report Abuse

0
0
Reply
VSMani - ,இந்தியா
16 ஏப்,2025 - 16:59 Report Abuse

0
0
Reply
MP.K - Tamil Nadu,இந்தியா
16 ஏப்,2025 - 16:30 Report Abuse

0
0
Keshavan.J - Chennai,இந்தியா
16 ஏப்,2025 - 18:11Report Abuse

0
0
Reply
Kovandakurichy Govindaraj - kovandakurichy,இந்தியா
16 ஏப்,2025 - 16:00 Report Abuse

0
0
Reply
Mecca Shivan - chennai,இந்தியா
16 ஏப்,2025 - 15:48 Report Abuse

0
0
Reply
karupanasamy - chennai,இந்தியா
16 ஏப்,2025 - 15:12 Report Abuse

0
0
Reply
RK - ,
16 ஏப்,2025 - 14:40 Report Abuse

0
0
Reply
மேலும் 12 கருத்துக்கள்...
மேலும்
-
தோல்வியில் இருந்து மீளப்போவது யார்? ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு
-
உயர்கல்வித்துறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்; முதல்வர் ஸ்டாலின்
-
மக்களுக்கு கஷ்டமான சூழ்நிலை; மாற்றவே கூட்டணி: நயினார் நாகேந்திரன்
-
நிதி மோசடி: 200 இந்தியர்களை நீக்கியது அமெரிக்க நிறுவனம்
-
பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை
-
ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
Advertisement
Advertisement