பஸ்சில் தவறி விழுந்த நர்ஸ் காயம்

ஆண்டிபட்டி : உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் காந்தி நகரை சேர்ந்தவர் கதிரேசன் மனைவி வைசாலி 23, மதுரையில் தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணிபுரிந்து வருகிறார்.

பணி முடித்து பண்ணைப்புரம் செல்வதற்காக மதுரையில் இருந்து தேனி செல்லும் பஸ்சில் சென்றுள்ளார். ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் பஸ்சிலிருந்து இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்க சென்றவர், அவர் வந்த பஸ்சை தவற விட்டுள்ளார்.

பின்னர் கம்பம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி உள்ளார். தவறுதலாக ஏறிய பஸ்சில் இருந்து இறங்குவதற்காக படிக்கட்டில் நின்றுள்ளார்.

பஸ் நகர்ந்ததில் நிலை தடுமாறிய வைசாலி கீழே விழுந்தார்.

இடது கணுக்காலில் பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் பலத்த காயம் அடைந்த அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் நடராஜனிடம் ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement