போலீஸ் செய்திகள்...

டிரைவரை தாக்கியவர்கள் மீது வழக்கு

தேனி: பண்ணைப்புரம் பொம்மையசாமி கோயில் தெரு அசோக்குமார் 38. ஆக்டிங் டிரைவராக பணிபுரிகிறார்.அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவிற்காக விழாக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுஇருந்தார். கடந்த ஏப்.12ல் நடந்த திருவிழாவில் அதேத்தெருவை சேர்ந்த பிரகாஷ்,மோகன், கோபி ஆகிய மூவர், தெருவை மறைந்து நடனம் ஆடினர்.

இதனால் அசோக்குமார், ஒதுக்குப்புறமாக நடனமாட வலியுறுத்தினார். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் விலக்கி விட்டனர். மறுநாள் திருவிழா கலைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.அங்கு வந்த மூவரும், அசோக்குமாரிடம் தகராறு செய்து கீழே தள்ளி கட்டையால் தாக்கினர். உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில்சிகிச்சையில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பினார். பாதிக்கப்பட்ட அசோக்குமார் புகாரில், கோம்பைபோலீசார் பிரகாஷ், மோகன், கோபி உட்பட மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்றவர் கைது

தேனி: சின்னமனுார் எஸ்.ஐ., சுல்தான்பாஷா சீப்பாலக்கோட்டை மின் நகர் பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்பகுதியில் வெள்ளயம்மாள்புரம் பேச்சியம்மன் கோயில் தெரு கார்த்திக் 42, கஞ்சா 3கிராம் விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை கைது செய்து கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

அனுமதி இன்றி ஊர்வலம் வி.சி.க., நிர்வாகிகள் மீது வழக்கு

தேனி: சின்னமனுார் வண்டிப்பேட்டை அருகே நகர இளஞ்சிறுத்தை பாசறைத் தலைவர் சாம்வளவன்,சின்னமனுார் நகர வழக்கறிஞரர் அணி நகரச் செயலாளர் மணிகண்டன், மற்றும் சிலர் வண்டிப்பேட்டைஅருகே வி.சி.க., கொடிகம்பத்தை பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைத்துள்ளனர். எஸ்.ஐ., புகாரில், சாம்வளவன், மணிகண்டன் உள்ளிட்டோர் மீது சின்னமனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

இவர்கள் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஊர்வலமாக சென்று, போக்குவரத்தில் இருந்த வாகனங்களை மறைத்துபட்டாசுகளை கொளுத்தினர். இதனால் சின்னமனுார் போலீசார் இருவர் மீது வழக்குப் பதிந்துவிசாரிக்கின்றனர்.

பீரோவில் இருந்த 5 பவுன் நகை, பணம் திருட்டு

தேனி: உத்தமபாளையம் மின்வாரிய அலுவலகம் எதிர் தெரு செல்வராஜ் 49. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.தற்போது திருச்சி மின்வாரிய அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். வீட்டில் பெற்றோருக்கு உதவிக்காக வீட்டு வேலைக்கு முத்துலட்சுமி என்ற பெண்ணை பணிக்கு நியமித்திருந்தார். இந்நிலையில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகையை ஏப்.2ல்இறுதியாக பார்த்திருந்த ராணுவ வீரர், ஏப்.12ல் பார்த்த போது 4 பவுன் தங்க நகை, வீட்டில் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூ.55 ஆயிரம் பணத்தை காணவில்லை. பீரோ சாவி வைக்கும் இடம் வீட்டு வேலைக்கு நியமித்த முத்துலட்சுமிக்கு மட்டுமே தெரியும். அவரிடம் விசாரித்த போது,அவர் 2 நாட்கள் விடுமுறை வேண்டும் என கூறிச் சென்றதாக செல்வராஜ் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கிறார்.

Advertisement