மகளிர் கல்லூரி ஆண்டு விழா

-பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசபட்டி திரவியம் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா தாளாளர் டாக்டர் பாண்டிராஜ் தலைமையில் நடந்தது.

செயலாளர் டாக்டர் ஹேமலதா, இயக்குனர் டாக்டர் இம்மானுவேல் ஜூடா முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறைத்தலைவர் ரீனா, முதன்மை செயல் அலுவலர் வசந்த், பேராசிரியர் அழகன் வரவேற்றனர்.

விழாவில் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை தொழில்நுட்ப அலுவலர் (ஓய்வு) பாண்டியம்மாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கம் வழங்கினார். முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணை செயலாளர் சுந்தரவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.

கலை நிகழ்ச்சி நடந்தது. வணிகவியல் துறை தலைவர் சிவநேசன் மற்றும் பேராசிரியைகள் மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். பேராசிரியை எப்சிராணி நன்றி கூறினார்.-

Advertisement