உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேனி: மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2025 மார்ச் 31ல் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் காத்திருப்போருக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதியை அடிப்படையில் உதவித்தொகை ரூ. 600 முதல் ரூ.1800 வரை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவடைந்திருந்தால் உதவித்தொகை பெறலாம்.

உதவித்தொகை பெற விரும்புபவர்கள் விண்ணப்பத்தினை http://tnvelaivaaippu.gov.in என்ற இணை முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement