கண்மாயில் அனுமதியின்றி மண் அள்ள முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம்

கூடலுார் : கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயில் அனுமதியின்றி மண் அள்ள முயன்றவர்களை வருவாய் துறையினர் தடுத்து திருப்பி அனுப்பினர்.

கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன.

தற்போது இரண்டாம் போக நெல் அறுவடை முடிவடைந்துள்ளது.

இக்கண்மாய்க்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து 18ம் கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு நீர்வரத்து உள்ளது.

தற்போது கண்மாயில் நீர் இருப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காலையில் கண்மாய் நீர்த்தேக்க பகுதியில் அனுமதியின்றி 2 லாரிகள் மூலம் சிலர் மண் அள்ள முயன்றனர். இதுகுறித்து விவசாயிகள் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகமது, தாசில்தார் கண்ணன் பார்வையிட்டனர்.

நீர்வளத்துறையின் அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளக் கூடாது என எச்சரித்து லாரியுடன் வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.

Advertisement