ஹைபிரிட் இன்ஜினில் வரும் செல்டோஸ்

அடுத்த தலைமுறை 'கியா செல்டோஸ்' எஸ்.யூ.வி., காருக்கு, ஹைபிரிட் இன்ஜின் வழங்குவதாக 'கியா' நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வர ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இது, தொடர்பாக கூடுதல் தகவல் எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும், தற்போது உள்ள 1.5 லிட்டர், 4 சிலிண்டர், என்.ஏ., பெட்ரோல் இன்ஜினுடன் மோட்டாரும் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2030க்குள், மொத்த விற்பனையில், 25 சதவீதம் ஹைபிரிட் கார்களாக இருக்க வேண்டும் என்பது இந்நிறுவனத்தின் இலக்காக உள்ளது. இது, அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

Advertisement