போக்ஸ்வேகன் டிக்வான் ஆர் - லைன் 7.1 வினாடி, 100 கி.மீ., வேகம்

'போக்ஸ்வேகன்' நிறுவனம், அதன் 'டிக்வான் ஆர் - லைன்' என்ற புதிய எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இது, டிக்வான் எஸ்.யூ.வி.,யின் ஸ்போர்ட்ஸ் மாடல் காராகும். இந்த கார், இறக்குமதி முறையில், உள்நாட்டில் விற்பனையாக உள்ளது.
'ஸ்டாண்டர்ட்' டிக்வான் காருடன் ஒப்பிடுகையில், இந்த காரின் டிசைன் மற்றும் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, 7.1 வினாடியில் 100 கி.மீ., வேகத்தை எட்டும் வகையில் இன்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், 7 - ஸ்பீடு 'டி.எஸ்.ஜி.,' ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் 'ஆல் வீல் டிரைவ்' அமைப்பு வழங்கப்படுகின்றன.
மறுசீரமைக்கப்பட்ட பம்பர்கள், பெரிய முன்புற கிரில், மெல்லிசான ஹெட் லைட் மற்றும் டி.ஆர்.எல்., லைட்கள், 19 அங்குல அலாய் சக்கரங்கள், கனெக்டட் எல்.இ.டி., டெயில் லைட் ஆகியவை வெளிப்புற மாற்றங்கள்.
உட்புறத்தில், முழு கருப்பு நிற கேபின், 12.9 மற்றும் 10.3 அங்குல இரட்டை டிஸ்ப்ளேக்கள், 3 - ஜோன் ஆட்டோ ஏ.சி., வெண்டிலேஷன் வசதியுடன் சொகுசு மசாஜ் சீட்கள், ஒயர்லெஸ் சார்ஜிங், பெனரோமிக் சன் ரூப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஐந்து வகை ரைட் மோடுகள், வாய்ஸ் என்ஹான்சர் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
பாதுகாப்புக்கு, 9 காற்று பைகள், 21 வகையான அடாஸ் அம்சங்கள், ஹில் ஹோல்டு மற்றும் டிசென்ட் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், நான்கு சக்கர டிஸ்க் பிரேக்குகள், ஏ.பி.எஸ்., உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இன்ஜின் - 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல், டி.எஸ்.ஐ.,
பவர் - 204 ஹெச்.பி.,
டார்க் - 320 என்.எம்.,
(0 - 100 கி.மீ.,) பிக்கப் - 7.1 வினாடி
மேலும்
-
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டிய கனமழை; நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை