ஹீரோவின் 100, 125 சி.சி., பைக்குகள் மேம்பாடு

'ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனம், அதன் 100 மற்றும் 125 சி.சி., பைக் அணிவகுப்பை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. 100 சி.சி., பைக்குகளுக்கு 1,750 ரூபாயும், 125 சி.சி., பைக்குகளுக்கு 2,000 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

100 சி.சி.,



இந்த பிரிவில், 'ஸ்பிளென்டர் பிளஸ்', 'பேஷன் பிளஸ்' ஆகிய இரு பைக்குகள் உள்ளன. இந்த பைக்குகளின் 97.2 சி.சி., இன்ஜின் 'ஒ.பி.டி., 2பி' உமிழ்வு விதிமுறைக்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. பேஷன் பைக், இரு புதிய நிறங்களில் வந்துள்ளது. இரு பைக்குகளுக்கும், எல்.இ.டி., லைட்டுகள், ப்ளூடூத் இணைப்பு வசதி, ட்யூப்லெஸ் டயர்கள் வருகின்றன.

125 சி.சி.,



இந்த பிரிவில், 'கிளாமர்', 'சூப்பர் ஸ்பிளென்டர் எக்ஸ்டெக்' ஆகிய பைக்குகள் உள்ளன. இந்த பைக்குகளின் 124.7 சி.சி., இன்ஜின், 'ஒ.பி.டி., 2பி' உமிழ்வு விதிமுறைக்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. இரு பைக்குகளுக்கும், டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு வசதி, டிஸ்க் பிரேக்குகள், ட்யூப்லெஸ் டயர்கள் வருகின்றன


ஸ்பிளென்டர் பிளஸ் விலை - ரூ. 78,926

பேஷன் பிளஸ் விலை - ரூ. 81, 651
கிளாமர் விலை - ரூ. 86,698

ஸ்பிளென்டர் எக்ஸ்டெக்விலை - ரூ. 88,128

Advertisement