'கர்வ்' டார்க் எடிஷன்

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 'கர்வ் டார்க் எடிஷன்' என்ற கருப்பு எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன், 'ஹாரியர்', 'நெக்ஸான்' மற்றும் 'சப்பாரி' கார்கள், இந்த எடிஷனில் வந்தன. இது, 'ஸ்டாண்டர்ட்' மாடல் காரை விட, 32,000 ரூபாய் அதிகம்.
இந்த எடிஷன், 'அக்கம்ப்ளிஷ்ட்' என்ற உயர்ந்த மாடல் காருக்கு மட்டுமே வந்துள்ளது. இதில், 1.2 லிட்டர் ஜி.டி.ஐ., டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இரு இன்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இரு இன்ஜின்களுக்கும், 6 - ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 - ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோ கியர் பாக்ஸ் வழங்கப்படுகின்றன.
கிரில் மற்றும் அலாய் சக்கரங்கள் உட்பட சில இடங்களில் குரோம் அலங்காரம் வந்துள்ளன. மற்ற படி, காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறம், முழு கருப்பு நிறத்தில் வருகிறது. இந்த காரின் விலை, 16.49 லட்சம் முதல் 19.20 லட்சம் ரூபாய் வரை உள்ளது.
மேலும்
-
ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'
-
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு