மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா ரூ.17 லட்சத்தில் ஹைபிரிட் மாடல்

'மாருதி சுசூகி' நிறுவனம், அதன் 'கிராண்ட் விட்டாரா' எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இதன் அணிவகுப்பில் புதிய மாடல் சேருவதோடு, கூடுதல் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
வெளிப்புற மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால், உட்புறத்தில், எலக்ட்ரானிக் சீட்கள், காற்றை சுத்தப்படுத்தும் ஏர் பியூரிபையர், எல்.இ.டி., கேபின் லைட்டுகள், வெயிலின் தாக்கத்தை குறைக்க 'சன் ஷேட்' வசதி ஆகியவை கூடுதல் அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
ஆறு காற்று பைகள், அடிப்படை அம்சமாக மாற்றப்பட்டுள்ளன. ஆல் வீல் டிரைவ் அமைப்பு உள்ள கார்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ்க்கு பதிலாக, 6 - ஸ்பீடு ஆட்டோ கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதில், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரக் வருகிறது.
'டெல்டா பிளஸ்' என்ற புதிய ஹைபிரிட் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், விட்டாரா ஹைபிரிட் காரின் ஆரம்ப விலை, 17 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த கார், 1.5 லிட்டர், 4 சிலிண்டர், என்.ஏ., மற்றும் 1.5 லிட்டர், 3 சிலிண்டர், ஸ்ட்ராங் ஹைபிரிட் என இரு பெட்ரோல் இன்ஜிகளில் வருகிறது.
இன்ஜின்(பெட்ரோல்) 1.5 லிட்டர், 4 சிலிண்டர், என்.ஏ., 1.5 லிட்டர், 3 சிலிண்டர், ஸ்ட்ராங் ஹைபிரிட்
பவர் 101.5 ஹெச்.பி., 114.4 ஹெச்.பி.,
டார்க் 137 என்.எம்., 141 என்.எம்.,
மைலேஜ் 21.11 கி.மீ., 27.97 கி.மீ.,
மேலும்
-
ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'
-
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு