முதல் முறையாக மேனுவல் கியர்பாக்ஸில் பி.எம்.டபிள்யு., இசட்4 எம்40ஐ

'பி.எம்.டபிள்யு.,' நிறுவனத்தின் 'இசட்4 எம்40ஐ' என்ற ஸ்போர்ட்ஸ் ரோட்ஸ்டர் கார், 'பியூர் இம்பல்ஸ்' என்ற சிறப்பு எடிஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எடிஷனுக்கு, மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேனுவல் கியர் பாக்ஸ் முதல் முறையாக வந்துள்ளது.
சாப்ட் ரூப் மற்றும் இரட்டை சீட்டுகள் கொண்ட இந்த காரில், 3 லிட்டர், இன்லைன் 6 - சிலிண்டர், எம் - ட்வின் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. வெறும், 4.5 வினாடியில், 100 கி.மீ., வேகத்தை அடையும். டாப் ஸ்பீடு, 250 கி.மீ.,ராக உள்ளது.
பெரிய 'ஹெக்சேகனல் கிட்னி' கிரில், மெல்லிசான எல்.இ.டி., டி.ஆர்.எல்., லைட்டுகள், ஏர் வெண்ட்டுகள், ரோட்ஸ்டர் கார்களுக்கான பிரத்யேக போனட் டிசைன், எம் - ஸ்போர்ட் 19 மற்றும் 20 அங்குல அலாய் சக்கரங்கள், 'எல்' வடிவ டெயில் லைட்டுகள், ட்வின் எக்சாஸ்ட்டுகள், பூட் லிட் ஸ்பாய்லர் ஆகியவை கொண்ட ஏரோடைனமிக் டிசைனில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உட்புறத்தில், புதிய சொகுசு லெதர் சீட்கள், 10.25 அங்குல இரட்டை டிஸ்ப்ளேக்கள், டூயல் ஜோன் ஏ.சி., எலக்ட்ரானிக் சீட்கள், ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, எம் - ஸ்போர்ட் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஆனால், வெண்ட்டிலேட்டட் சீட் அம்சம் வழங்கப்படவில்லை.
6 காற்று பைகள், டயர் அழுத்தம் கண்காணிப்பு வசதி, பஞ்சர் ஆனாலும் நீண்ட துாரம் பயணிக்கும் 'ரன் பிளாட்' டயர்கள், ஏ.பி.எஸ்., டிராக் ஷன் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் ஆகியவை பாதுகாப்பு அம்சங்கள். இந்த காருக்கு, 'மெர்சிடிஸ் பென்ஸ் சி.எல்.இ., கேப்ரியோலெட்' கார் போட்டியாக உள்ளது.
இன்ஜின் 3 லிட்டர், இன்லைன் 6 - சிலிண்டர், எம் - ட்வின் டர்போ பெட்ரோல்
பவர் 340 ஹெச்.பி.,
டார்க் 500 என்.எம்.,
டாப் ஸ்பீடு 250 கி.மீ.,
(0 100 கி.மீ.,) பிக்கப் 4.5 வினாடி
மேலும்
-
ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'
-
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு