ரோட்டோர மரங்களால் பசுமை இளைஞர் மன்றத்தினர் ஆர்வம்

திருவாடானை : ஓரியூர் அருகே புதுவயல் கிராமத்தை சேர்ந்த இளைஞர் மன்றத்தினர் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கி.மீ.,க்கு ரோட்டோரம் மரங்களை நட்டனர். இந்த மரங்கள் வளர்ந்து பசுமையாக உள்ளது.

திருவாடானை தாலுகா ஓரியூர்-புதுவயல் ரோட்டில் புதுவயல் கிராமத்தை சேர்ந்த முத்தமிழ் இளைஞர் மன்றத்தை சேர்ந்தவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மரங்களை நட்டனர். அந்த மரங்கள் தற்போது வளர்ந்து பசுமையாக உள்ளன.

முத்தமிழ் இளைஞர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:

சட்டசபை தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று பிளக்ஸ் போர்டில் எழுதி கிராமத்தின் எல்லையில் வைத்தோம். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓரியூர்-புதுவயல் ரோட்டில் ஒரு கி.மீ.,க்கு புங்கன், கொடுக்காபுளி, வேம்பு, நாவல், பூவரசு என பல்வேறு வகையான 120 மரக்கன்றுகளை நட்டோம்.

தினமும் தண்ணீர் ஊற்றி கால்நடைகள் மேய்ந்து விடாமல் பாதுகாத்தோம். இதில் 110 மரங்கள் வளர்ந்து நிழல் தருகிறது. பஸ் வசதியில்லாததால் நடந்து செல்லும் மக்கள் வெயிலுக்கு மரங்களுக்கு கீழ் அமர்ந்து இளைப்பாறி செல்கின்றனர் என்றனர்.

Advertisement