கரும்புக்கு நிலுவை தொகை கேட்டு பெட்ரோலுடன் வந்த விவசாயிகளால் பரபரப்பு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, கரும்பு அனுப்பிய விவசாயிகள் நிலுவைத்தொகை கேட்டு பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த ஜனவரி முதல் வாரத்தில் அரவை துவங்கியது. கடந்த மாதத்துடன் 55 ஆயிரம் டன் மட்டுமே அரவை செய்துள்ளனர்.

கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் மொத்தம் 4,000 டன்னிற்கு மட்டுமே பணம் வழங்கியுள்ளது. மூதமுள்ள 51 ஆயிரம் டன்னிற்கு ரூபாய் 18 கோடி நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை 11:00 மணிக்கு மணிக்கு ஓடையூர், அகர ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 விவசாயிகள் கரும்பிற்கான நிலுவைத்தொகை கேட்டு பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க போவதாக கூறியதால் பரபரப்பு நிலவியது.

உடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்தனர்.

இதனையேற்று, விவசாயிகள் 12:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement