உதவியாளர் சாவு

கடலுார்: பாடலீஸ்வரர் கோவில் அர்ச்சகர் உதவியாளர் மயங்கி விழுந்து இறந்தார்.

கடலுார் அடுத்த பாதிரிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 54; புதுப்பாளையத்தில் தங்கி, திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்களுக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, வீட்டில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement