சீமானுக்கு எதிரான வழக்கு; வீடியோவை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்க முடிவு

7

சென்னை: நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமானுக்கு எதிரான வழக்கில், வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கடந்த 2024ம் ஆண்டு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சீமான், நீதித்துறையையும், நீதிமன்ற செயல்பாடுகளையும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து பேசியதாக, வக்கீல் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் இந்த மனு மீது நடந்த விசாரணையின் போது, எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்கப் போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சீமான் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால், இதுவரையில் 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று கூறினர்.

Advertisement