சிறப்பான தொடக்கம்; இலக்கை நோக்கி முன்னேறும் ராஜஸ்தான்

புதுடில்லி: டில்லி அணிக்கு எதிரான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வரும் ராஜஸ்தான் சிறப்பான தொடக்கத்தை அமைத்துள்ளது.
டில்லியில் நடக்கும் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 32வது லீக் ஆட்டத்தில் டில்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டில்லி அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றி பெற்று, தோல்வியையே சந்திக்காத அணியாக வலம் வந்தது. ஆனால், கடைசியாக மும்பை அணியுடனான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
அதேபோல, ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 4ல் தோல்வியை சந்தித்துள்ளது. கடைசியாக குஜராத், பெங்களூரு அணிகளுக்கு எதிரான 2 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. எனவே, இரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப போராடும்.
அதன்படி, டில்லி அணிக்கு இந்த முறையும் தொடக்கம் சரியாக அமையவில்லை. பிரேசர் மெக்குர்க் 9 ரன்களில் ஆர்ச்சர் பந்தில் அவுட்டானார்; இவர் மும்பைக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய கரண் நாயர் ரன் ஏதுமின்றி ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
தொடர்ந்து, கே.எல். ராகுல் (38), அபிஷேக் போரல் (49), ஸ்டப்ஸ் (34), அக்ஷர் படேல் (34) ஆகியோர் ரன்களை குவித்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
189 ரன்கள் இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளது.