மயங்கி விழுந்த ஜவுளி கடை ஊழியர் பலி 

புதுச்சேரி; பஸ்சில் ஏறிய ஜவுளி கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

பெங்களூரு ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 51; தனியார் ஜவுளி நிறுவன ஊழியர். இவர் ஜவுளி எடுப்பதற்காக புதுச்சேரி, தமிழ்நாடு பகுதிகளுக்கு வந்து, செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் புதுச்சேரி வந்த பிரகாஷ் பணி முடித்து கொண்டு, இரவு 11:30 மணிக்கு பெங்களூரு பஸ்சில் ஏறி அமர்ந்தார்.

திடீரென பின் சீட்டில் மயங்கி விழந்தார். அவரை, சக பயணிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு டாக்டர் பரிசோ தித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரது தந்தை குண்டப்பா கொடுத்த புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement