வெண்ணை உருண்டை பாறை பாதுகாக்கப்பட்ட சின்னமானது

ராஜபாளையம்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரத்தில் வானிறைக்கல் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
தென்மலை செல்லும் வழியில் குன்றக்குடி என அழைக்கப்படும் குன்றுகளில் பாறை ஓவியங்கள், வெண்ணை உருண்டை எனப்படும் வானிறைப் பாறை, குகைகள் உள்ளன. இதன் அருகே உள்ள புத்துார், மாங்குடி உள்ளிட்ட பகுதியில் தொல்லியல் சிற்பங்கள் சமணர் படுக்கை உள்ளிட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்கள் பாதுகாப்பின்றி உள்ளன.
ஏப்., 9ல் இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. நேற்று முன்தினம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகை ஓவியம், புடைப்புச் சிற்பங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில், அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கும் வரவேற்பு தெரிவித்துள்ள வரலாற்று ஆய்வாளர்கள், அதுகுறித்த செய்தி வெளியிட்டு உதவிய நம் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்