சிறை புதரில் கஞ்சா, மொபைல்போன் கண்டெடுப்பு

புழல், புழல் சிறையில், 3,500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் மொபைல்போன், கஞ்சா உள்ளிட்டவை, சிறை காவலர்கள் சோதனையின்போது, அவ்வப்போது பறிமுதல் செய்யப்படுவது தொடர்கிறது.

இந்நிலையில், விசாரணை சிறையில் கண்காணிப்பு கோபுரம் அருகே, துாய்மை பணியின்போது, புதரில் கேட்பாரற்று பொட்டலம் ஒன்று கிடந்தது.

பொட்டலத்தில், ஒரு மொபைல் போன், 39 கிராம் கஞ்சா, சிகரெட், லைட்டர் மற்றும் ஹான்ஸ் உள்ளிட்டவை இருந்தன. சிறை அதிகாரி அளித்த புகாரில், புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

***

Advertisement