கட்டுமான பணிக்கு மொத்தமாக மரம் வாங்கும் நிலையில் கவனிக்க வேண்டியவை!

வீடு கட்டும் வேலையில் ஒவ்வொரு நிலையிலும் என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். இதில், கட்டுமான பணிகளை ஒப்படைக்கும் நிலையில், நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனத்தை பொறுத்து இதில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.
கட்டுமான பொருட்களை ஒப்பந்ததாரரே வாங்குவது என்பதில் உடன்பாடு ஏற்பட்டால், அதில் உரிமையாளர் எந்த விதத்திலும் தலையிட முடியாது என்று நினைக்க வேண்டாம். உங்களுக்கான வீட்டை கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பதை நீங்கள் தான் உறுதி செய்துகொள்ள வேண்டும். இதில் சிமென்ட், மணல், செங்கல், கம்பி போன்ற பொருட்கள் தரமான நிலையில் வாங்கப்படுகிறதா என்று மட்டும் பார்த்தால் போதும் என பலரும் நினைக்கின்றனர்.
ஆனால், உண்மையில், இதற்கு அப்பால், மின்சார உபகரணங்கள், பதிகற்கள், மரப்பொருட்கள் போன்றவற்றை வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.
தற்போதைய சூழலில், பெரும்பாலான வீடுகளில் மரம் வாங்கி, தங்களுக்கு தேவையான வடிவத்தில் பர்னிச்சர்கள் செய்வதில் ஆர்வம் குறைந்துள்ளது. நாகரிக வளர்ச்சி, அவசரம் போன்ற காரணங்களால், மக்கள் ரெடிமேட் முறையில் தயாரிக்கப்பட்ட பர்னிச்சர்களை விரும்பி வாங்குகின்றனர்.
உண்மையில் ஒரே மாதிரி வடிவமைப்பில் தயாரிக்கப்படும் பர்னிச்சர்கள், அனைத்து வீடுகளுக்கும் ஏற்றதாக இருப்பதில்லை. பல்வேறு சிறப்பு திட்டமிடல் அடிப்படையில் வீட்டை வடிவமைத்து கட்டுவோருக்கு, தனியாக தயாரிக்கப்படும் பர்னிச்சர்கள் தான் ஏற்றதாக அமையும்.
பொதுவான வடிவமைப்பில் உள்ள வீடுகளுக்கு பொதுவாக தயாரிக்கப்படும் பர்னிச்சர்களை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், தனித்தன்மையுடன் வடிவமைத்து கட்டப்படும் வீடுகளுக்கு பர்னிச்சர்களை தனியாக தயாரிக்க வேண்டியது அவசியம்.
இதற்கு தேவையான மரங்களை மொத்தமாக வாங்கும் நிலையில் உரிய வல்லுநர் வழிகாட்டுதலுடன் செயல்பட வேண்டியது அவசியம். வீட்டுக்கு தேவையான பர்னிச்சர்கள், கதவு, ஜன்னல் போன்ற பொருட்களை தயாரிக்க மரம் வாங்கும் நிலையில், கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். என்ன பொருள் தயாரிக்க வேண்டும் என்பதை சரியாக திட்டமிட்டு அதற்கு ஏற்ற வகை மரங்களை, உரிய அளவுகளில் வாங்க வேண்டும்.
இதில் பெரும்பாலும் தயார்படுத்தப்பட்ட பலகை வடிவத்தில் மரம் வாங்க பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது