புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?

தனியாக நிலம் வாங்கி அதில் வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடுவோர், கட்டுமான பணிகளை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் குழப்பம் அடைகின்றனர். பொதுவாக அந்தந்த பகுதியில் அடுத்தடுத்த வீடு கட்டும் திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்ததாரரிடம் பணிகளை அளிப்பது வழக்கமாக உள்ளது.
இந்த வகையில் நீங்கள் வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் பொறுப்பை ஒரு ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கும் முன் எதிர்பார்க்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதில் தெளிவு தேவை. ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்பதற்காக, மிக குறைந்த விலையில் யார் பணிகளை செய்வார் என்று பார்ப்பது பரவலாக காணப்படுகிறது.
பொருளாதார ரீதியில் செலவு குறைப்பு என்ற நோக்கத்தில் யார் மிக குறைந்த விலையில் வேலை செய்கிறார் என்று பார்ப்பது தவறல்ல. அதே நேரத்தில் எதார்த்த சூழலில் ஒத்துவராத அளவுக்கு மிக மிக குறைந்த செலவில், ஒருவர் வீடு கட்டி கொடுக்கிறேன் என்று வந்தால் கூடுதல் விசாரிப்புகள் தேவை.
நடைமுறையில் உள்ள விலையில் மிக குறைவான தொகைக்கு ஒருவர் வீடு கட்ட வேண்டும் என்றால், இன்றைய சூழலில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அவர் பயன்படுத்தும் கட்டுமான பொருட்கள் தரமானவையா என்பதில் துவங்கி பல்வேறு விஷயங்களை விசாரிக்க வேண்டும்.
இதில், ஒரு கட்டுமான ஒப்பந்ததாரர் அல்லது பொறியாளர் என்ன முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்கிறார் என்பதை கவனிக்க வேண்டியது மிக மிக அவசியம். பொதுவாக, அந்தந்த கால சூழலுக்கு ஏற்ற வகையில் நடைமுறையில் உள்ள தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
பெரும்பாலான கட்டுமான ஒப்பந்ததாரர்கள் அல்லது பொறியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த தயங்குவதில்லை. ஆனால், குறிப்பிட்ட சிலர், புதிய தொழில்நுட்பங்களை ஓரளவுக்கு கூட கடைபிடிக்காமல் தவிர்ப்பதை பார்க்க முடிகிறது.
கட்டுமான பணியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் உரிமையாளருக்கு அடிப்படை தெளிவு முதலில் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் உங்கள் வீட்டை கட்டும் பணியில் என்னென்ன தொழில்நுட்பங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு கட்டத்தில், பழைய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் அதிக செலவு, காலதாமதம் ஏற்படும் என்றால், புதிய வழிமுறைகளை கடைப்பிடிப்பதில் துளியும் தவறு இல்லை. ஆனால், வேண்டுமென்றே பழைய தொழில்நுட்பங்களை மட்டுமே கடைபிடிப்பேன் என்று பிடிவாதம் காட்டும் நபர்களிடம், வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைப்பது நல்லதல்ல என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது