கருமாரியம்மன், சக்தி விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காக்கநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள கருமாரியம்மன் மற்றும் சக்தி விநாயகர் கோவில்களில், நேற்று, கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.

முன்னதாக, காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு பூமி சுத்தி பூஜை நடந்தது. பின், 10:00 மணிக்கு யாக சாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட நீரை, கோபுர கலசங்களின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து, கருமாரியம்மன் மற்றும் சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் சுற்றுவட்டார கிராமத்தினர் பங்கேற்றனர்.

Advertisement