காங்கோ படகு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 148 ஆக உயர்வு; 100 பேர் மாயம்!

கின்சாசா: காங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் உள்ள ஆறுகளில் படகு போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் படகு போக்குவரத்தை விரும்புகின்றனர். வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகில் 500க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.
பன்டாக்கா பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. படகில் பயணம் செய்தவர்கள் தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தனர். இதில் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் மாயமாகி உள்ளனர்.
அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விபத்தில் இருந்து தப்பிய 100 பேர் உள்ளூர் டவுன் ஹாலில் உள்ள ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாசகர் கருத்து (5)
balaji melpakkam - kanchipuram,இந்தியா
19 ஏப்,2025 - 11:42 Report Abuse

0
0
Rajah - Colombo,இந்தியா
19 ஏப்,2025 - 12:44Report Abuse

0
0
Kumar Kumzi - ,இந்தியா
19 ஏப்,2025 - 13:56Report Abuse

0
0
Reply
thehindu - ,இந்தியா
19 ஏப்,2025 - 09:07 Report Abuse

0
0
Reply
thehindu - ,இந்தியா
19 ஏப்,2025 - 08:50 Report Abuse

0
0
Reply
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
Advertisement
Advertisement