சீரான பக்கங்களுடன் அறைகள் அமைவதை உறுதி செய்வது எப்படி?

புதிதாக வீடு கட்டுவதற்கான ஆயத்த பணிகளை திட்டமிடும் போது குறிப்பிட்ட சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீட்டின் மொத்த பரப்பளவு என்ன, அதில் எந்தெந்த அறைகளுக்கு எவ்வளவு இடம் ஒதுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
சொந்தமாக வீடு கட்டும் பெரும்பாலான மக்கள் இரண்டு படுக்கை அறை கொண்டதாக தான் திட்டமிடுகின்றனர் என்பதை எதார்த்த சூழல் அடிப்படையில் தவிர்க்க முடியாது. ஆனால், சில ஆண்டுகளில் இரண்டு படுக்கை அறை வீடும் போதுமானதாக இல்லையே என்ற எண்ணம் ஏற்படும்.
வீட்டில் வசிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்காத நிலையில் இருக்கும் இடம் போதுமானதாக இல்லையே என்ற எண்ணம் ஏன் ஏற்படுகிறது என்பது புதிராக தோன்றும். இதற்கு, இரண்டு வகையான காரணங்களை கட்டுமான துறை வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.
சொந்த வீடு என்று ஆகிவிட்ட நிலையில் நமக்கே தெரியாமல், நாம் செய்யும் சில தவறுகள் தான் வீட்டில் இட நெருக்கடி ஏற்பட்டது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. சொந்த வீட்டில் குடியேறிய பெரும்பாலான மக்கள், தேவை என்பதை கடந்து பல்வேறு வகையான பொருட்களை வாங்கி போடுகின்றனர்.
குறிப்பாக, நமக்கு பயன்படுமா என்பது குறித்த எவ்வித புரிதலும் இன்றி வாங்கப்படும் பொருட்கள் தான் வீட்டில் இட பற்றாக்குறைக்கு காரணம். இதற்கு அடுத்தபடியாக, வீட்டின் அறைகள் குறித்த வடிவமைப்பு விஷயத்தில் நாம் செய்யும் தவறுகளும் இதற்கு காரணம்.
பொதுவாக, வீட்டில் படுக்கை அறை, வரவேற்பு அறை, சமையலறை போன்றவற்றை வடிவமைக்கும் நிலையில் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன. கட்டடத்தின் வெளிப்புற தோற்றத்தை வித்தியாசமாக அமைக்கிறேன் என்று நாம் எடுக்கும் நடவடிக்கைகளால் அறைகளின் பக்கங்கள் சீரற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றன.
ஒரு அறை என்றால் அதன் நான்கு பக்கங்களும் சீரான அளவில் இருக்க வேண்டியது அவசியம். சதுரம் அல்லது செவ்வகம் எதுவாக இருந்தாலும் இதில் நான்கு பக்கங்கள் சீராக இருக்க வேண்டும் என்பதில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருந்தால் வீட்டில் இட பற்றாக்குறை போன்ற தோற்றங்களை தவிர்க்கலாம்.
சீரற்ற பக்கங்களை கொண்டதாக அறைகள் அமையும் போது உட்புறத்தில் பயன்பாட்டு பகுதி சில இடங்களில் குறையும் சூழல் ஏற்படுகிறது. இதில் அலமாரி, மேஜை, கட்டில் போன்ற பொருட்களை வைக்கும் போது, பயன்படுத்த முடியாத அளவுக்கு சில இடங்கள் விடுபடுகின்றன.
இந்த இரண்டு வகைகளிலும் வீட்டுக்குள் பயன்பாட்டு இடத்தின் அளவுகள் குறையும் சூழலில், பொருட்கள் அதிக இடத்தை அடைத்து கொண்டது போன்ற தோற்றம் ஏற்படும். எனவே, வரைபடம் தயாரிப்பு நிலையில் அறைகளின் சீரான பக்கங்களை பாதிக்காமல் வடிவமைப்பை முடிவு செய்வது நல்லது என்கின்றனர் கட்டமான துறை வல்லுநர்கள்.
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது