வேகவதி ஆற்று சிறுபாலத்திற்கு புதிதாக தடுப்புச்சுவர் அமைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் தாயார் குளத்திற்கு செல்லும் சாலையில் வேகவதி ஆறு குறுக்கிடும் இடத்தில் சிறுபாலம் அமைந்துள்ளது. இப்பாலத்திற்கு இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், இரவு நேரத்தில் இப்பாலத்தை கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, ஆற்றில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் இருந்தது.
இதனால், இப்பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி சார்பில், பொது நிதியில் இருந்து, சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைத்தனர்.
தடுப்பு கம்பிகளுக்கும், சுவர்களுக்கும் வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் சிறுபாலம் வாகன போக்குவரத்துக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது என, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவிததார்.
மேலும்
-
இந்தியாவின் அதிருப்தி எதிரொலி: பாக். உடனான கடற்படை பயிற்சி திட்டத்தை ரத்து செய்த இலங்கை
-
பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி; மாணவர்கள் புகாரில் கர்நாடகா போலீஸ் வழக்கு
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!