தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
சென்னை போன்ற நகரங்களில் தனி வீடு கட்ட முடியாதவர்கள் அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்க ஆர்வம் காட்ட துவங்கினர். அதிலும், ஆடம்பர வசதிகளுடன், அக்கம் பக்கத்தினரின் தொல்லை இல்லாத வகையில் சிறப்பு வடிவமைப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் வந்துவிட்டன.
இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் மூன்று படுக்கை அறை வீட்டை வாங்கும் அளவுக்கு பட்ஜெட் இருந்தால் போதும், வில்லா வகை வீட்டை வாங்கலாம் என்ற கருத்து வலுவடைந்துள்ளது.
சென்னை புறநகர் பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் வில்லா வகை வீடுகளை கட்டி கொடுக்க ஆர்வம் காட்டுகின்றன.
வில்லா வகை வீடுகளை வாங்கும் நிலையில் குறிப்பிட்ட சில விஷயங்களில் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். இதில் முதலில், அந்த திட்டத்தில், உங்களுக்கான நிலம் தனி மனையாக வரையறுக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.
அந்த மனையின் பரப்பளவு, 850 சதுர அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பதுடன் அங்கு சாலைகள், பூங்காக்கள் பொது பயன்பாட்டில் உள்ளதா என்று பாருங்கள். உங்களுக்கான மனையின் அளவு மற்றும் எல்லைகளை வரையறுத்து தனியாக பத்திரம் பதிந்து கொடுக்கப்பட வேண்டும்.
இதன் பின் தனியாக கட்டுமான ஒப்பந்தம் ஏற்படுத்தி வில்லா வீட்டை உங்களுக்கு ஏற்ற வகையில் கட்டி கொடுக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் நிலம், வீடு சேர்த்து ஒரே பத்திரத்தில் பதிவு செய்து கொடுப்பதாக கூறப்படும் நிலையில் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பதிவுத்துறையின் சில நடைமுறை மாற்றங்களால் தனியாக கட்டுமான ஒப்பந்தம் தேவையில்லை என்று சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கூறுகின்றன. அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்துக்கு தான் பதிவுத்துறையின் புதிய நடைமுறை பொருந்தும்.
தனி வீடுகளுக்கான வழிமுறைகளின் அடிப்படையில், நிலத்துக்கான பத்திரம் தனியாக பதிவு செய்யப்படுவது அவசியம். அப்போது தான் அந்த திட்டத்தில் நிலம் தொடர்பான உரிமையியல் பிரச்னைகள் ஏற்படும் போது உங்கள் உரிமை பாதுகாக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில், ஒவ்வொரு மனையிலும் தனித்தனியாக வீடு கட்டி கொடுக்கும் வகையில் வில்லா வகை குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், சாலை மட்டுமல்லாது, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, குடிநீர், மின்சார இணைப்பு போன்ற வசதிகள் தனித்தனியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக, அடுக்கு மாடி குடியிருப்பு போன்று, யு.டி.எஸ்., அடிப்படையில் நிலத்தை பங்கிட்டு கொடுக்கும், வில்லா திட்டங்களில் வீடு வாங்கினால், மறு விற்பனை, மறு மேம்பாட்டில் பிரச்னை வர வாய்ப்புள்ளது.
எனவே, வில்லா வகை வீடுகள் வாங்குவோர் நிலம் சார்ந்த உரிமைகளை துல்லியமாக கவனிக்க வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது