இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!

புதிதாக வீடு கட்டும் போது அதில் மின்சார இணைப்புகள் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணிகளை ஒரு ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கும் நிலையில் மின்சார இணைப்பு வசதிகளை யார் வாயிலாக மேற்கொள்வது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இன்றைய சூழலில், பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் மின்சார இணைப்பு பணிகளை கட்டுமான ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்கின்றனர். இதில் ஒப்பந்தத்தில் சேர்ப்பதுடன் அனைத்தும் முடிந்துவிட்டதாக உரிமையாளர்கள் நினைத்துக்கொள்கின்றனர்.
உண்மையில் கட்டுமான ஒப்பந்தத்தில் மின்சார இணைப்பு தொடர்பாக எந்தெந்த பணிகள் எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை கட்டுமான ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். இதில் குறிப்பாக உரிமம் பெற்ற மின்னியல் பொறியாளர் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம்.
மின்சார வாரியத்தால் முறையாக அங்கீ கரிக்கப்பட்ட வல்லுனர்கள் வாயிலாக தான் வீட்டுக்கான மின்சார இணைப்பு மற்றும் ஒயரிங் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் ஒவ்வொரு இடத்திலும் பொருத்தப்படும் சுவிட்ச்கள், பிளக் பாயிண்ட்கள், பல்புகளுக்கான ஹோல்டர்கள் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இதில் பெரும்பாலான மக்கள் வீட்டுக்கு தரமான மின்சார கேபிள்கள் வாங்க வேண்டும் என்பதில் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றனர். எளிதில் தீ பிடிக்காத வகை தயாரிப்புகளை இதற்காக மக்கள் தற்போது தேர்வு செய்வதை பரவலாக பார்க்க முடிகிறது.
இதில் சுவிட்ச் பாக்ஸ்கள் அமைப்பதில் தற்போது தரமான, பாதுகாப்பான தயாரிப்புகள் அதிகமாக விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை பயன்படுத்தும் போது, சுவிட்ச்கள், பிளக் பாயிண்ட்கள் இறுக்கமானதாக இருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.
புதிதாக அமைக்கும் போது இறுக்கமாக இருக்கும் சுவிட்ச்கள், பிளக் பாயிண்ட்கள் சில மாதங்களில் இறுக்கம் குறைந்து காணப்படும். அது போன்ற சூழலில், தேவையில்லாமல் மின்சார கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் இது விஷயத்தில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
சில சமயங்களில் இறுக்கம் குறைந்த பிளக் பாயிண்ட்கள் பயன்படுத்த எளிதாக இருக்கலாம் என்பதற்காக மக்கள் அப்படியே விட்டுவிடுகின்றனர். இது போன்ற இடங்களில் மின்சாரம் கசிய துவங்கும் என்பதால், கவன குறைனாக ஈரமான கையுடன் நீங்கள் பயன்படுத்தும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே. உங்கள் வீட்டுக்கான மின்சார இணைப்பு பணியில் ஒயரிங் நிலையில் என்ன அளவுக்கு கவனமாக இருக்கிறோமோ அதைவிட அதிக கவனம் சுவிட்ச், பிளக் பாயிண்ட்களில் இருக்க வேண்டியது அவசியம். இதில் துளியும் தரத்தில், பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள கூடாது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது