பெண்கள் குறித்த பொன்முடி பேச்சு கண்டனத்துக்குரியது * முதல்வர் நடவடிக்கை எடுக்க கார்த்தி எம்.பி., கோரிக்கை
சிவகங்கை:அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து பேசியது கடும் கண்டனத்துக்குரியது. அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது போதாது. முதல்வர் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் விரும்புவதாக சிவகங்கையில் கார்த்தி எம்.பி., கூறினார்.
அவர் கூறியதாவது: 12 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்கில் காங்., பார்லிமென்ட் குழுத்தலைவர் ராகுல், முன்னாள் தலைவர் சோனியா உள்ளிட்டோர் மீது தற்போது அமலாக்கத்துறை மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதை நீதிமன்றத்தில் உரிய முறையில் சந்திப்போம். எதிர் கட்சி தலைவர்களின் நேரத்தை வீணடிப்பதற்காக அமலாக்கத்துறை தொடுத்துள்ள இந்த வழக்கு நமத்துப்போன பட்டாசு போல் நீதிமன்றத்தில் ஆகும்.
பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி கட்டாயக் கல்யாணம் போன்றது. கட்டாயத்தில் நடந்துள்ள இந்தக்கூட்டணி எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது தெரியாது. அ.தி.மு.க.,வின் அடிமட்டத் தொண்டர்களுக்கு இந்த கூட்டணி பிடிக்கவில்லை. விரைவில் அ.தி.மு.க.,வின் உண்மை தொண்டர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். காங்., மீதான ஊழல்களை கண்டித்து பா.ஜ., போராட்டம் நடத்தும் என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது அவரது அறியாமையை காட்டுகிறது.
அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து இழிவாகப் பேசியது கடும் கண்டனத்துக்குரியது. அவர் மீது கட்சித் தலைமை ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. இது போதாது முதல்வர் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். நாம் தமிழர் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நினைப்பது தவறு. அக்கட்சி மட்டுமல்ல இன்னும் சில கட்சிகளும் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கலாம். இண்டியா கூட்டணிக்கு புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து தி.மு.க., தலைவர் முடிவு செய்வார். காங்., கட்சி மாநிலத் தலைவர் பதவியை எனக்கு கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் எனது ஸ்டைலில் கட்சியை நடத்துவேன். அது தமிழக காங்., கட்சிக்கு பிடிக்காது. டில்லியில் உள்ள கட்சித் தலைமையும் எனக்கு தருவதற்கு தயாராக இல்லை. ஆட்சியில் பங்கு பெற அனைத்து கட்சிகளுமே விரும்பும். அதற்கான சூழ்நிலை உருவாக வேண்டும். தேர்தலுக்குப் பிறகு அதைப்பற்றி யோசிக்கலாம் என்றார்.
மேலும்
-
கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
-
கால தாமதமான அறிவிப்பு; பின் தேதியிட்ட வயது வரம்பு; போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு தயாரான பலர் தவிப்பு
-
சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம்: டிரம்ப் அடுத்த அதிரடி திட்டம்!
-
வெண்ணை உருண்டை பாறை பாதுகாக்கப்பட்ட சின்னமானது
-
டில்லியில் அதிகாலை இடிந்து விழுந்த கட்டடம்: 4 பேர் பரிதாப பலி
-
காரைக்கால் துறைமுகத்தில் படகு எரிந்து ரூ.10 லட்சம் சேதம்