பெண் என்பவர் யார்? பிரிட்டன் கோர்ட் விளக்கம்

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின், ஸ்காட்லாந்து பார்லிமென்டில், 2018ல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, ஸ்காட்லாந்து பொது வாரியங்களில், பெண்களுக்கு 50 சதவீதம் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இந்த சட்டத்தில், திருநங்கையும் பெண்ணாகக் கருதப்படுவார் என்று கூறப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.
கடைசியாக, பிரிட்டன் உச்ச நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு வந்தது. இதை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
சமத்துவ சட்டத்தில், பாலினம் மற்றும் பெண் என்பதற்கான விளக்கம் தெளிவாக உள்ளது. அதன்படி, பிறக்கும்போது பெண்ணாக இருப்பவரின் பாலினம் பெண்ணாக கருதப்படும். திருநங்கையாக மாறுவோரை பெண்ணாகக் கருத முடியாது. இருப்பினும், ஏற்கனவே உள்ள மற்ற சட்டங்களின்படி, திருநங்கையரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




மேலும்
-
கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
-
கால தாமதமான அறிவிப்பு; பின் தேதியிட்ட வயது வரம்பு; போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு தயாரான பலர் தவிப்பு
-
சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம்: டிரம்ப் அடுத்த அதிரடி திட்டம்!
-
வெண்ணை உருண்டை பாறை பாதுகாக்கப்பட்ட சின்னமானது
-
டில்லியில் அதிகாலை இடிந்து விழுந்த கட்டடம்: 4 பேர் பரிதாப பலி
-
காரைக்கால் துறைமுகத்தில் படகு எரிந்து ரூ.10 லட்சம் சேதம்